அண்மைய செய்திகள்

recent
-

2022 உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது ஆர்ஜென்டீனா

22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் ஆர்ஜன்டீனா அணி மூன்றாவது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை வெற்றுள்ளது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடர் கடந்த மாதம் 20 ஆம் திகதி கட்டாரில் கோலாகலமாக ஆரம்பமாகியது. லீக் சுற்றுகள், நாக் அவுட் சுற்றுகளின் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸும், முன்னாள் சாம்பியன் ஆர்ஜன்டீனாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இரண்டு அணிகளும் தலா இரண்டு முறை உலக கிண்ணத்தை வென்று மூன்றாவது முறை உலக கிண்ணத்தை தனதாக்கிக் கொள்ளும் நோக்குடன் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் களமிறங்கின. 

 போட்டியின் ஆரம்பம் முதல் இரு அணியினரும் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர். போட்டியின் 23 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனா அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய அணித் தலைவர் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். இதனையடுத்து போட்டியில் 36 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனா அணி சார்ப்பில் 2 ஆவது கோலை Ángel Di María அடித்தார். 

 அதனடிப்படையில் முதல் பாதி முடிவில் 2 - 0 என ஆர்ஜன்டீனா முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடைபெற்ற 2 ஆவது பாதியில் இரு அணிகளும் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர். போட்டியின் 80 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய பிரான்ஸ் அணி வீரர் kylian mbappé கோல் அடித்து அசத்தினார். இதனையடுத்து விறுவிறுப்பாக சென்ற போட்டியின் 81 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் kylian mbappé மீண்டும் கோல் அடித்து போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தார். அதனடிப்படையில் போட்டியின் 90 நிமிடங்கள் முடிவில் இரு அணிகளும் 2 - 2 என்ற ரீதியில் சமநிலையில் இருந்தனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் மேலதிக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. 

 இதன்போது போட்டியின் 108 நிமிடத்தில் ஆர்ஜன்டீனா அணி சார்ப்பில் அணித் தலைவர் மெஸ்ஸி கோல் அடித்தார். இதனையடுத்து போட்டியின் 118 நிமிடத்தில் kylian mbappé மீண்டும் கோல் அடித்து போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தார். இதனையடுத்து மேலதிக நேர முடிவில் இரு அணிகளும் 3 - 3 என்ற ரீதியில் சமநிலையில் இருந்ததது. இதனையடுத்து பெனால்ட்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 4 - 2 என்ற ரீதியில் ஆர்ஜன்டீனா அணி போட்டியில் வெற்றி பெற்றது. இம்முறை கால்பந்து உலக கிண்ண தொடரில் 7 கோல்களை அடித்து அதிக கோல்களை அடித்தமைக்கான கோல்டன் பூட் விருதை kylian mbappé தனதாக்கி கொண்டுள்ளார்.

2022 உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது ஆர்ஜென்டீனா Reviewed by Author on December 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.