அண்மைய செய்திகள்

  
-

172,000 ரூபா பணத்துடன் பிரபல கஞ்சா வியாபாரி கைது!

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் உள்ள கஞ்சா வியாபாரி ஒருவரின் வீட்டை ஞாயிற்றுக்கிழமை (11) இரவு முற்றுகையிட்ட பொலிஸார் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 55 வயதுடைய பிரபல வியாபாரியை 15 கிராம் கேரளா கஞ்சா மற்றும் 172,000 ரூபா பணத்துடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய உதவி பொலிஸ் அத்தியட்டசகர் செனவரெத்தினவின் ஆலோசனைக்கமைய அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.எம். பண்டார விஜயதுங்காவின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் வசந்த தலைமையிலான குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு குறித்த வீட்டை முற்றுகையிடனர். இதன்போது கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 55 வயதுடைய வியாபாரியை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 15 கிராம் கேரளா கஞ்சா மற்றும் 172,000 ஆயிரத் ரூபா பணத்தை மீட்டனர். இதில் கைது செய்யப்பட்ட வரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


172,000 ரூபா பணத்துடன் பிரபல கஞ்சா வியாபாரி கைது! Reviewed by Author on December 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.