அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் செல்லப்பிராணியை காப்பாற்ற தன் உயிரை இழந்த இளைஞன்!

கிளிநொச்சியில் கிணற்றில் விழுந்த செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய சிரேஸ்ட ஊடகவியலாளரின் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச் சம்பவம் நேற்றைய தினம் (27-01-2023) காலை இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உதயநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட வீட்டு நாய் கிணற்றில் விழுந்துள்ளது. 

குறித்த நாயை மீட்பதற்காக குறித்த இளைஞன் பாதுகாப்பற்ற குறித்த கிணற்றில் தும்பு கயிறை பயன்படுத்தி இறங்கியுள்ளார். கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த குறித்த இளைஞன் மேல் ஏறாத நிலையில் தந்தை அயலவரின் உதவியுடன் தேடியுள்ளார். சேற்றில் புதைந்த நிலையில் குறித்த இளைஞன் மாட்டிக்கொண்டமையால் உயிர் இழக்க நேரிட்டுள்ளது. இந்த நிலையில் அயலவர்களின் உதவியுடன் நீர் இறைக்கப்பட்டு குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் 24 வயதுடைய விவேகாநந்தன் வேணிலவன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியில் செல்லப்பிராணியை காப்பாற்ற தன் உயிரை இழந்த இளைஞன்! Reviewed by Author on January 28, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.