அண்மைய செய்திகள்

recent
-

ட்ரோன், ஸ்கேனர் கருவிகளுடன் போதைப் பொருள் கடத்தல் குழு கைது

ஹொரோயின் போதைப்பொருள் முகவராக செயற்பட்ட இளைஞன் உள்ளிட்ட குடும்ப பெண் ட்ரோன் கருவி நவீன ஸ்கேனர் கருவிகளுடன் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் ஒருவரின் தகவலுக்கமைய செயற்பட்ட பொலிஸ் குழுவினர் திங்கட்கிழமை (13) அதிகாலை 33 வயது மதிக்கத்தக்க போதைப்பொருள் வியாபாரி வெள்ளையன் என அப்பகுதி மக்களினால் அழைக்கப்படுகின்ற முஹமட் ஹனீபா அர்சத் என்பவரை சாய்ந்தமருது பகுதியில் வைத்து கைது செய்தனர். 

 இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து போதைப்பொருளை அளக்கின்ற இலத்திரனியல் தராசு மற்றும் 5 கிராம் 140 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் உள்ளிட்டவைகள் மீட்கப்பட்டன. இச்சந்தேக நபர் கடந்த 13.01.2023 அன்று வீதியில் பயணம் செய்த பாடசாலை மாணவர் ஒருவரை வாகனம் ஒன்றினால் மோதி தலைமறைவாகி இருந்த நிலையில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சந்தேக நபர் அக்கரைப்பற்று நிந்தவூர் கல்முனை பெரிய நீலாவணை மருதமுனை சம்மாந்துறை பகுதிகளுக்கு போதைப்பொருட்களை விநியோகிக்கின்ற பிரதான வியாபாரி என பொலிஸார் குறிப்பிட்டனர். தொடர்ந்து கைதான சந்தேக நபரின் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடுகள் பொலிஸாரின் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ட்ரோன், ஸ்கேனர் கருவிகளுடன் போதைப் பொருள் கடத்தல் குழு கைது Reviewed by Author on February 14, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.