துருக்கி-சிரியா நிலநடுக்கம் : பலியானோர் எண்ணிக்கை 24ஆயிரத்தைக் கடந்தது
மொத்தம் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கடும் குளிர் மற்றும் சேதமடைந்த வீதிகள் போன்ற காரணங்களால் மீட்புப் பணி கடும் சவாலாக உள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை எளிதில் வழங்குவதற்காக சிரியாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சர்வதேச உதவிகளை வழங்குவதற்கு சிரியா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
துருக்கி-சிரியா நிலநடுக்கம் : பலியானோர் எண்ணிக்கை 24ஆயிரத்தைக் கடந்தது
Reviewed by Author
on
February 11, 2023
Rating:

No comments:
Post a Comment