இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் தொன் லித்தியம் உலோகப் படிமம் கண்டுபிடிப்பு
அவுஸ்திரேலியா, அர்ஜென்டினா மற்றும் சிலியில் இருந்தே இதுவரை லித்தியம் பெருமளவில் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய லித்திய படிமமாக 21 மெட்ரிக் தொன் லித்தியம் பொலிவியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தற்போது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை விட நான்கு மடங்கு அதிகம்.
முன்னதாக இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகாவில் சிறிய அளவில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இந்தியா தற்போது மின்சார வாகன உற்பத்தி மற்றும் பயன்பாடுகளை ஊக்குவித்து வருகிறது. 2030 ஆண்டுகளுக்குள் அனைத்து இடங்களிலும் மின்சார வாகன பயன்பாட்டை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில், பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் வகுத்து வருகிறது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் தொன் லித்தியம் உலோகப் படிமம் கண்டுபிடிப்பு
Reviewed by Author
on
February 11, 2023
Rating:

No comments:
Post a Comment