உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பணத்தை வழங்குவது சிரமமான விடயம் - அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவிப்பு
எவ்வாறாயினும், இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேவைக்கேற்றவாறு நிதியை விடுவிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்கவிடம் வினவிய போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்தப்பட்ட கடமை என்பதால், பகுதி பகுதியாகவேனும் நிதி வழங்கப்படுமென நிதி அமைச்சு ஏற்கனவே தெரிவித்துள்ளதாக கூறினார்.
அதற்கமைய நடவடிக்கை எடுக்கப்படுமென தாம் நம்புவதாகவும் சமன் ஶ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பணத்தை வழங்குவது சிரமமான விடயம் - அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவிப்பு
Reviewed by Author
on
February 06, 2023
Rating:

No comments:
Post a Comment