மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற உள்ளூராட்சி சமூக அபிவிருத்தி மாநாடு-Photos
சமூக புத்தாக்க ஈடுபாடு எனும் தொணிப்பொருளில் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் செயற்திறனை அதிகரிக்கும் முகமாக அதே நேரம் பின் தங்கிய நிலையில் காணப்படும் சனசமூக நிலையங்களை மீள் வளர்சியடைய செய்யும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் ஏற்பாட்டில் சமூக அபிவிருத்தி மாநாடு இன்று செவ்வாய்கிழமை (21) காலை 9.00 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தின் இடம் பெற்றது
குறித்த மாநாட்டில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் சனசமூக நிலையங்கள் ஊடாக நீடித்து நிலைக்ககூடிய அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாகவும் அதே நேரம் போசனைகுறைபாடு மற்றும் போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்தக்கூடிய செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகள் விழிப்புணர்வு மற்றும் தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டது
அதே நேரம் கடந்த வருடங்களில் சிறப்பாக செயற்பட்ட சனசமூக நிலையங்களுக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் சிறப்பாக செயற்பட்ட சனசமூக நிலைய அங்கத்தவர்களுக்கான பணப்பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் சுமல் பந்துல சேன அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக முன்னால் வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் அவர்களும் இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு சங்கத்தின் தலைவி செல்வி சூரிய குமாரி ,மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கனாநாதப்பிள்ளை ஏகநாதன் அவர்களும் மன்னார் உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள் சனசமூக நிலைய அங்கத்தவர்கள், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
நிகழ்வின் இறுதியில் சனசமூக நிலையங்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் உள்ளூர் உற்பத்தி கண்காட்சியும் இடம் பெற்றதுடன் குறித்த கண்காட்சியில் சிறப்பான உற்பத்திகளை காட்சிப்படுத்திய சனசமூக நிலையங்களுக்கு ஊக்குவிப்பு தொகையும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மன்னார் நகர் நிருபர்
21.02.2023
.jpg)
No comments:
Post a Comment