மக்களே அவதானம் ! - வைத்தியர்கள் எச்சரிக்கை !
நாட்டில் புதுவருட பண்டிகை காலங்களில் இன்புளுவன்சா வைரஸ் பரவும் அபாயம் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கர்ப்பிணிப் பெண்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கைக்குழந்தைகளுக்கு இந்த இன்புளுவன்சா தொற்று உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்புளுவன்சா தொற்றுக்கு வழமைபோன்று இருமல், காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சன நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்குச் சென்றால், தேவையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் பண்டிகைக் காலங்களில் சன நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment