சீனாவுக்கு இலங்கை குரங்குகள் எதற்கு? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அவதானம்!
இலங்கையில் இருந்து 100,000 குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று இன்று (12) தனது கருத்தை வெளியிட்டுள்ளது.
அங்கு உரையாற்றிய சுற்றுச்சூழல் ஆர்வலர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன,
"விலங்கு ஒன்று வேறு நாடுகளுக்கு அனுப்பு முடியும், பாதுகாப்பு நோக்கங்களுக்காக அல்லது மிருகக்காட்சிசாலைக்காக மட்டுமே ஆகும்."
"எனவே, இறைச்சிக்காகவோ அல்லது அறிவியல் ஆராய்ச்சிக்காகவோ இலங்கையில் இருந்து விலங்குகளையோ அல்லது விலங்கின் பகுதிகளையே ஏற்றுமதி செய்வது முற்றிலும் சட்டவிரோதமானது."
“சீனா இலங்கை குரங்குகளை கேட்கிறது என்றால், அவர்கள் எதற்காக கேட்கிறார்கள், எந்த அளவிலான எண்ணிக்கையை கேட்கிறார்கள் என்று நமது அதிகாரிகள் தெளிவான விளக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
சீனாவுக்கு இலங்கை குரங்குகள் எதற்கு? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அவதானம்!
Reviewed by NEWMANNAR
on
April 13, 2023
Rating:

No comments:
Post a Comment