அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வாழ்வுதய சூழல் பாதுகாப்பு பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புகைப்படக் கலை பயிற்சி நெறி

மன்னார் வாழ்வுதய சூழல் பாதுகாப்பு பிரிவினால் திங்கட்கிழமை (24) முதல் நேற்று புதன்கிழமை (26) மாலை வரை மூன்று நாள் புகைப்படக்கலை பயிற்சி நெறியானது மன்னார்   வாழ்வுதய   கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 இந்நிகழ்விற்கு மன்னார் வாழ்வுதயத்தின் பதில் இயக்குனர் அருட்தந்தை அருள்ராஜ் குரூஸ்  தலைமை தாங்கினார்.

   அஸான் டெக்னொலஜி நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயிற்சியானது புகைப்படக்கருவி கள், அவற்றின் செயற்பாடுகள் பற்றியும், புகைப்பட நுட்பங்கள், ஆவணப்படுத்தல்,குறும்படம் முதலான பல விடயங்களை உள்ளடக்கி உள்ளது.  

இப்பயிற்சி நெறிக்கு இலக்கு கிராமங்களான வேப்பங்குளம், சவுத் பார், காத்தான்குளம், மடுறோட் ஆகியவற்றின்  இளைஞர் யுவதிகளும்,   வாழ்வுதயப் பணியாளர்களும் கலந்து பயன் பெற்றுக்கொண்டனர். 


(மன்னார் நிருபர்)

(27-04-2023)















மன்னார் வாழ்வுதய சூழல் பாதுகாப்பு பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புகைப்படக் கலை பயிற்சி நெறி Reviewed by NEWMANNAR on April 27, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.