மன்னார் மடு மாணவர்களுக்கு ஐந்து லட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மடு பிரதேச செயலக பிரிவில் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சியை முன்னேற்றும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட 125 மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் இவ்வாறு மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி 1986 O/L - 1989 A/L பிரிவு மாணவர்களால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மன்/பெரியபண்டிவிரிச்சான் தேசிய பாடசாலை மற்றும் மன்/இரணைஇலுப்பைக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை ஆகிய இடங்களில் இடம்பெற்றது.
முதற்கட்டமாக மன்/பெரியபண்டிவிரிச்சான் தேசிய பாடசாலையில் இன்றையதினம் (13) காலை 10.30 மணியளவில் அப் பாடசாலையின் அதிபர் ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி 1986 O/L - 1989 A/L பிரிவு பழைய மாணவர்களால் ஒருதொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து இன்று மதியம் ஏனைய மாணவர்களுக்கு மன்/இரணைஇலுப்பைக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மடு மாணவர்களுக்கு ஐந்து லட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
Reviewed by NEWMANNAR
on
April 13, 2023
Rating:

No comments:
Post a Comment