*ஆதி லிங்கேஸ்வரருக்கு ஆப்பு வைத்த -*டக்ளசும் ஜீவன்தொண்டமானும்
இன்று வெட்டுக்கு நாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கு அனைத்துவிதமான ஏற்பாடுகளையும் ஒழுங்கு படுத்தும்படி ஆலய அறங்காவலர் சபைக்கு கூறினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
பின்னர் ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லாமல் அறங்காவலர் சபையை வீட்டில் சந்திப்பதற்கு கேட்டிருந்தார்.
அதை மறுத்த ஆலய அறங்காவலர் சபையினர் ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில்தான் சந்திப்பை மேற்கொள்ள வேண்டுமென்கின்ற கடும் முயற்சியின் பயனாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மலைக்குச் செல்லாமல் மலை அடிவாரத்தில் இருந்த நாகதம்பிரான் ஆலயத்தில் வைத்து கலந்துரையாடினர்.
இதையடுத்து ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் நீதிமன்ற வழக்கில் இருப்பதனால் லிங்கம் இன்று பிரதிஷ்டை செய்ய முடியாது 10ம் திகதிக்கு பின்னர் லிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கு கலந்துரையாடி ஏற்பாடு செய்யப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் தெரிவித்தனர்.
இதில் எழுகின்ற கேள்வி என்னவெனில் ஆதி லிங்கேஸ்வரர் ஆலயமானது தொல்லியல் துறை திணைக்களம் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்ததற்கமைய நீதி மன்ற வழக்கில் உள்ளதென்பதை ஏற்றுக் கொள்கின்றோம்.
ஆனால் குருந்தூர் மலை ஆதி சிவன் ஆலயம் நீதிமன்ற வழக்கில் உள்ளதுடன் அங்கு பௌத்த விகாரை அமைப்பதை உடன் நிறுத்தும்படி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீதி மன்ற கட்டளையை மீறி அங்கு பௌத்த விகாரை இராணுவத்தினரின் ஒத்துழைப்போடு கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு என்ன பதில் கூறப்போகின்றீர்கள்?
நீதி மன்றத்தின் கட்டளை
சிங்களப் பேரினவாதிகளுக்கும் மத வெறிபிடித்த பிக்குகளுக்கும் செல்லாக் காசாகிப் போய்விட்டதோ என்பதே தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகம்.
விடயத்திற்கு வருவோம் அடுத்தது ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் லிங்கம் வைப்பதற்கு ஒழுங்குபடுத்தும்படி கூறிவிட்டு பின்னர் வைக்க முடியாது என்று கூறியது சரிதானா என்பதை சற்று சிந்தித்து பாருங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும்.

No comments:
Post a Comment