மன்னார் நகர சபை யை மாநகர சபையாக தரமுயர்த்தும் விவகாரம்-பிரதமருக்கு செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.அவசர கடிதம்
மன்னார் நகர சபை யை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு இன்று (03) திங்கட்கிழமை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
-குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,
மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் அமைச்சரவையில் இருந்து அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
எனினும் இன்னும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படவில்லை என்பதனை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
எனவே விரைவில் மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபை யை மாநகர சபையாக தரமுயர்த்தும் விவகாரம்-பிரதமருக்கு செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.அவசர கடிதம்
Reviewed by NEWMANNAR
on
April 03, 2023
Rating:

No comments:
Post a Comment