அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம் பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் புதிய அதிபர் பொறுப்பேற்கும் நிகழ்வு

மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் புதிய அதிபர் பதவியேற்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(21) காலை 9 மணியளவில் பாடசாலை பிரதி அதிபர் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது

 மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கடந்த 7 வருடங்களாக அதிபரகாக கடமையாற்றிய அருட்சகோதரர் றொஜினோல்ட் கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலை அதிபராக நியமனம் பெற்று சென்ற நிலையில் கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலையில் கடந்த 5 வருடங்களாக கடமையாற்றிய அருட்சகோதரர் சந்தியாகு மன்/புனித சவேரியார் ஆண்கள் பாடசாலை அதிபராக இன்று  கடமைகளை பெறுப்பேற்றுள்ளார்

குறித்த கடமைகளை பெறுப்பேற்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர்,அருட்சகோதரர் றெஜினோல்ட் டிலாசால் சபை அருட்சகோதரர்கள் ,அருட்சகோதரிகள் , கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலை உதவி அதிபர்,ஆசிரியர்கள்,பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் மற்றும் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் ,மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் 










சிறப்பாக இடம் பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் புதிய அதிபர் பொறுப்பேற்கும் நிகழ்வு Reviewed by NEWMANNAR on April 21, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.