சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மாவட்டச் செயலக இப்தார் நிகழ்வு..
மன்னார் மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இப்தார் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் தலைமையில் இன்று வியாழக்கிழமை (20) மாலை மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்டச் செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இடையில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் கலந்து கொண்டார்.
நிகழ்வில் இப்தார் நிகழ்வுக்கான விசேட உரை இடம் பெற்றதோடு சர்வமத தலைவர்களின் விசேட உரைகளும் இடம் பெற்றது.
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மாவட்டச் செயலக இப்தார் நிகழ்வு..
Reviewed by NEWMANNAR
on
April 20, 2023
Rating:

No comments:
Post a Comment