அண்மைய செய்திகள்

recent
-

கல்முனை துறைவந்தியமேடு நான்கு வயது சிறுமி கிரண்யாஸ்ரீ எழுதுவதில் இரு உலக சாதனைபடைத்துள்ளார்

 கல்முனை,  துறைவந்தியமேடு 

சிறுமியின் உலக சாதனை குவியும் பாராட்டுக்கள்

அம்பாறை மாவட்;டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட  துறைவந்தியமேடு கிராமத்தைச்சேர்ந்த ஜனாசுகிர்தன் கிரண்யாஸ்ரீ  எனும் நான்கு வயதுச் சிறுமி இரண்டு உலக சாதனைகள் படைத்துள்ளார்.


இவர் தனது இரண்டு கைகளாலும் A  தொடக்ம்  Z  வரை குறுகிய நேரத்தில் ஆங்கில எழுத்துக்களை  எழுதி அவர் ஏற்கனவே படைத்த சாதனையை முறியடித்துள்ளார். முதலாவது சாதனை A-Zவரை 3.30 நிமிடங்கள், இரண்டாவது சாதனை A-Z வரை 2.38 நிமிடங்கள் இவை இந்தியாவை தலைமையமாகக் கொண்டு  இயங்கும் இரண்டு உலக சாதனை நிறுவனங்கள் மூலம் நிகழ்த்தப்பட்டது. 


இந்தியாவில் சென்னையில் இருக்கும் Jackhi book of world record, மற்றும் இந்தியா கல்கத்தாவில் இருக்கும்

Netaji world record,  ஆகிய உலக சாதனை புத்தக நிறுவனங்களின் ஊடாக இச் சாதனை பதியப்பட்டுள்ளது.


சாதனை நிகழ்த்திய சிறுமியின் தந்தை ஜனாசுகிர்தன் உலகில் மிகச்சிறிய சிவலிங்கத்தை மரத்தில் செதுக்கி உலக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.







கல்முனை துறைவந்தியமேடு நான்கு வயது சிறுமி கிரண்யாஸ்ரீ எழுதுவதில் இரு உலக சாதனைபடைத்துள்ளார் Reviewed by NEWMANNAR on April 29, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.