மாணவியை கத்தியால் குத்திய சிறுவன் - இரத்ததுடன் பொலிஸ் நிலையம்
அனுராதபுரம் - கெக்கிராவ ரணஜயபுர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 15 வயது மாணவன் ஒருவன் அதே பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயது மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
சந்தேக நபர் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் மாணவியே இவ்வாறு கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் மாணவியின் இடது கை மற்றும் இடது காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மாணவியை குத்த பயன்படுத்த கத்தியுடன் குறித்த மாணவன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்த போது பொலிஸார் அவரை கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும், காயமடைந்த மாணவனிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் காரணம் தெரியவரும் எனவும் ரணஜயபுர பொலிஸ் நிலைய பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்குரிய மாணவி கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்
Reviewed by Author
on
June 21, 2023
Rating:


No comments:
Post a Comment