அண்மைய செய்திகள்

recent
-

விண்ணப்ப முடிவுத்திகதி நீட்டிப்பு : மட்டக்களப்பு சிலியேட் (SLIATE)

 மட்டக்களப்பு சிலியேட்டில் புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்ப முடிவுத்திகதி எட்டு நாட்களால் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

கல்வி அமைச்சினால் செயற்படுத்தப்பட்டுவரும் மட்டக்களப்பு சிலியேட்டில் புதிய மாணவர் சேர்க்கை தற்போது இடம்பெற்று வரும்நிலையில் அதன் விண்ணப்ப முடிவுத்திகதியே 04.07.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

பிரதான வீதிகோவில் குளம்ஆரையம்பதி எனும் முகவரியில் அமைந்துள்ள குறித்த நிறுவகத்தால் கணக்கீடுதகவல் தொழிநுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பிரிவுகளில் உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகளை பயில தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

 

க.பொ.த உயர்தர பரீட்சையில் மூன்றுபாடங்கள் சித்தியடைந்தோர்  பட்டத்திற்கு சமமான HND in Accountancy, NVQ மட்டம் ஆறு (6) இற்கு சமமான HND in Information Technology மற்றும் HND in English ஆகிய கற்கைநெறிகளை பயிலும் வாய்ப்பு இங்கு வழங்கப்படுகின்றன.

 

கற்கைநெறிகள் இலவசமாக போதிக்கப்படுவதுடன் பல்கலைகழகம் போல இங்கும் மகாபொல மற்றும் பருவகால பயணசீட்டு போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிறுவகத்தில் உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகளை முடித்து வெளியேறுவோர் ஆசிரிய நியமணம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமணம் உள்ளிட்ட பல்வேறு அரச பதவிகளில் உள்வாங்கப்படுவதுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைகழகங்களில் உயர் கல்வியை பயிலும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.

 

இதேவேளைபணிக்கு செல்பவர்கள்  குறித்த கற்கைநெறிகளுக்கு கட்டணம் செலுத்தி சனி ஞாயிறு தினங்களில் பகுதிநேரமாக பயிலும் வாய்ப்பும் இங்கு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

apply.sliate.ac.lk என்ற இணையத்தளத்தினூக இதுபற்றிய வர்த்தமானி அறிவித்தலை  பெற்றுக்கொள்ள முடிவதுடன் அதே இணையத்தளத்தினூக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.



விண்ணப்ப முடிவுத்திகதி நீட்டிப்பு : மட்டக்களப்பு சிலியேட் (SLIATE) Reviewed by Author on June 24, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.