திரிபோஷா வழங்காமைக்கான காரணம் வௌியானது
6 மாதம் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்கும் அரசின் திட்டம் சுமார் ஒரு வருடமாக முடங்கிக் கிடப்பதாக அரசின் குடும்ப நலச் சேவைகள் சங்கத் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ள போதும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.
"நமது நாட்டில் கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், 6 மாதங்களுக்கும் மேலான மற்றும் 5 வயதுக்குட்பட்ட சகல குழந்தைகளுக்கும் திரிபோஷா வழங்கப்பட வேண்டும்.
எனினும் சுமார் ஒரு வருடமாக 6 மாதம் முதல் 03 வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்கப்படுவதில்லை.
இது ஒரு இரக்கமற்ற நிலை. கொரோனா தொற்றுநோய்களின் போது கூட குழந்தைகளுக்கு திரிபோஷா கொடுக்கப்பட்டது.
திரிபோஷா ஏன் கொடுக்கப்படவில்லை என தாய்மார்கள் கேள்வி எழுப்புகிறாா்கள். ஆனால் எங்களுக்கு திரிபோஷா கிடைக்கவில்லை.
"ஒரு வருடமாக திரிபோஷா இல்லை என்பது அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் தெரியும். திரிபோஷா சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது."
"கடந்த காலங்களில் அஃப்லோடொக்சின் பிரச்சனை இருந்தது. சுகாதார அமைச்சகம் அதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.
பிரச்சனை இருந்தால், அதை அரசாங்கம் தீர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்குவதைப் பறிப்பது பொருத்தமானது அல்ல" என அரசின் குடும்ப நலச் சேவைகள் சங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.
திரிபோஷா வழங்காமைக்கான காரணம் வௌியானது
Reviewed by Author
on
June 24, 2023
Rating:

No comments:
Post a Comment