கனடாவில் மாயமான இலங்கை சிறுவன்..! பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்
கனடாவின் தெற்கு வின்னிபேர்க் என்ற பிரதேசத்தில் இருந்து இலங்கை சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
15 வயதான இனுக குணதிலக்க என்ற சிறுவனையே காணவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்னர்.
இதனையடுத்து அவரை தேடும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 24ஆம் திகதி வகுப்புக்கு சென்று அங்கிருந்து வெளியேறிய பின்னரே அவரை காணவில்லை என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இனுக குணதிலக்க இறுதியாக கடந்த 24 ஆம் திகதி காலை ஃபோர்ட் ரிச்மண்ட் பகுதியில் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் தகவல் தெரிந்தவர்கள் வின்னிபெக் காவல் சேவையின் காணாமல் போனோர் பிரிவுக்கு அழைப்பை ஏற்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
.jpg)
No comments:
Post a Comment