யாழ். விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் விமான சேவை !!
வாரத்தின் ஏழு நாட்களும் யாழ். விமான நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனை துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடன் உதவி கிடைக்கப்பெற்றதும் விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்
யாழ். விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் விமான சேவை !!
Reviewed by Author
on
June 03, 2023
Rating:

No comments:
Post a Comment