கோடிக்கணக்கான தங்கத்துடன் சிக்கிய மூவர்
சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்கத்தை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த நபரும் அதற்கு உறுதுணையாக இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
இதன்படி 1 கிலோ 780 கிராம் தங்கத்துடன் வந்த சந்தேகநபரும் அதற்கு உறுதுணையாக இருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் வெல்லம்பிட்டிய மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 39 மற்றும் 52 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர்கள் என்ற வகையில் இவர்கள் இருவரும் இரண்டு கோடியே 80 சட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அவர்கள் இந்தியாவின் சென்னையில் இருந்து நாட்டுக்கு வந்துள்ளனர்.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்கத்தை வெளிநாடு கொண்டு செல்ல முயன்ற பெண்ணையும் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் 814 கிராம் தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கோடிக்கணக்கான தங்கத்துடன் சிக்கிய மூவர்
 Reviewed by Author
        on 
        
July 11, 2023
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
July 11, 2023
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
July 11, 2023
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
July 11, 2023
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment