சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழு ஏற்பாடு செய்த விளையாட்டு விழா
மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு விழா சனிக்கிழமை (8) மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மைதானத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
குறித்த விளையாட்டு விழாவில் மன்னார் மறை மாவட்டத்தை சார்ந்த அனைத்து பங்கு இளையோர் இணைந்து நான்கு குழுக்களாக பிரித்து விளையாட்டுகள் சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கேடயம் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை , குரு முதல்வர் அருட்பணி கிறிஸ்து நாயகம் அடிகளார்,மன்னார் மாவட்ட இளைஞர் ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்தந்தை ஏ.விக்டர் சோசை அடிகளார் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழு ஏற்பாடு செய்த விளையாட்டு விழா
Reviewed by Author
on
July 10, 2023
Rating:
Reviewed by Author
on
July 10, 2023
Rating:


.jpeg)



.jpeg)

.jpeg)




No comments:
Post a Comment