வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி
வவுனியா, மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, மன்னார் வீதி, 4ம் கட்டைப் பகுதியில் நேற்று நள்ளிரவு (20) இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து மன்னார் வீதி வழியாக இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, குறித்த மோட்டார் சைக்கிள் 4ம் கட்டைப் பகுதியில் வைத்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த சம்பவத்தில வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த வவுனியா மின்சார சபையில் கடமையாற்றும் 32 வயதுடைய சஜந்தன் என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார். விபத்து தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்னளனர்.
Reviewed by Author
on
July 21, 2023
Rating:


No comments:
Post a Comment