அண்மைய செய்திகள்

recent
-

7 பச்சிளம் குழந்தைகளை ஈவிரக்கம் இன்றி கொலை செய்த தாதி!

 இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் வைத்தியசாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் முதல் 2016 ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலக் கட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன.

வைத்தியசாலையில் சிசு மரணங்கள் திடீரென்று அதிகரிப்பு தொடர்பான முறைபாடின் பேரில் பொலிஸார் கடந்த 2019 ஆம் ஆண்டு விசாரணையை ஆரம்பித்தனர்.அப்போது அந்த வைத்தியசாலையில் லூசி லெட்பி என்ற தாதி, சிசுக்கள் மரணம் அதிகரித்த சம்பவங்களின் போது பணியாற்றி வந்தது தெரிந்தது. 

இது போன்ற சம்பவங்களின் போது அந்த இடத்தில் லூசி லெட்பி இருந்ததாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது. விசாரணையின் போது குழந்தைகளின் சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவ குறிப்பேடுகள், லூசி லெட்பி வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதில் நான் ஒரு பாவி, இதற்கு நான்தான் காரணம். இன்று உங்கள் பிறந்த நாள். நீங்கள் இங்கு இல்லை. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் போன்ற வாசகங்களை எழுதியிருந்தார். 

இதையடுத்து தாதியர் லூசி லெட்பி 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது. அப்போது நோய் வாய்ப்பட்ட அல்லது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அதிக பால் ஊட்டியும், இன்சுலினுடன் விஷத்தை கொடுத்தும், குழந்தைகளுக்கு ரத்த ஓட்டத்தில் ஊசி மூலம் காற்றை செலுத்தியும், இரப்பை குழாயில் காற்றை செலுத்தியும் அதிகப்படியான பால் அல்லது திரவங்களை கட்டாயமாக கொடுத்தும் கொன்றதாக குற்றச்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அரசு தரப்பு சட்டத்தரணி தெரிவிக்கையில், மிகவும் பாதிக்கப்படக்கூடிய சில குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பு லூசி லெட்பியிடம் ஒப்படைக்கப்பட்டது. பாதுகாப்பாக இருக்க வேண்டிய சூழலில் அவர் குழந்தைகளுக்கு தீங்கு விளைவித்தார். ஒவ்வொரு குழந்தையும் பாதிக்கப்பட்ட போது லூசி லெட்பி, பணியில் இருந்ததை கவனித்த சக ஊழியர்கள் கவலைகளை தெரிவித்தனர் என வாதிட்டார். 

ஆனால் இதை லூசி லெட்பி மறுத்தார். அவரது தரப்பு சட்டத்தரணி கூறும்போது, லூசி ஒரு அப்பாவி. குழந்தைகள் மரணத்தை தாங்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் அது போன்ற வாசகங்களை எழுதியதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் லூசி லெட்பி மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகளில் 7 குழந்தைகளை கொன்றது, 6 குழந்தைகளை கொல்ல முயன்றது ஆகியவை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

லூசி லெட்பி தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரம் வருகின்ற 21 ஆம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் லூசி லெட்பிக்கு அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.  



7 பச்சிளம் குழந்தைகளை ஈவிரக்கம் இன்றி கொலை செய்த தாதி! Reviewed by Author on August 19, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.