அண்மைய செய்திகள்

recent
-

13வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மீது விமர்சனம்

 அரசியலமைப்பின் 13வது  திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகளை கண்டிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

நாடு ஜனநாயக அரசியல் நெருக்கடியை நோக்கி நகர்வதாக அதன் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தை பிளவுபடுத்த முயற்சித்ததன் காரணமாகவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரத்தை இழந்தார் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு வடக்கு கிழக்கில் இனப்பிரச்சினைக்கு ஏதேனும் தீர்வு காணப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் இடம்பெற்ற கலவரங்கள், ஹர்த்தால்கள் மற்றும் போராட்டங்களிலிருந்து எந்தவொரு கட்சியும் பாடம் கற்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாட்டில் அனைத்து துறைகளிலும் நெருக்கடியான சூழல் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




13வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மீது விமர்சனம் Reviewed by Author on August 13, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.