இந்தியாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ள ஆதித்யா எல்-1 விண்கலம்
ஆதித்யா எல்-1 விண்கலம் இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் - 3 திட்டம் வெற்றிபெற்ற நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை வடிவமைத்து உள்ளது.
சூரியனை கண்காணித்து ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெற்றுள்ளது. ஆதித்யா எல்-1 விண்கலத்தில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ள ஆதித்யா எல்-1 விண்கலம்
Reviewed by Author
on
September 02, 2023
Rating:

No comments:
Post a Comment