யாழ்ப்பாண தமிழன் சிங்கப்பூர் ஜனாதிபதி
ஊரெழு யாப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தர்மன் சண்முகரத்தினம் அவர்கள் சிங்கப்பூரில ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு 70 வீதத்திற்குக்கும் மேலான வாக்குகளை பெற்று சிங்கப்பூரின் 9வது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
யாழ் தமிழனான தர்மன் சண்முரத்தினம் சிங்கபூர் நாட்டின் நிதி அமைச்சராகவும் துணை பாதுகாப்பு அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பதவி வகித்துவந்த நிலையில் தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் வெற்றிப்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இவருக்கு போட்டியாக இருவர் களமிறங்கிய நிலையில் அவர்கள் 20% வீத வாக்குகள் இல்லாததால் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றார் என்பதோடு இவரது தாய் யாழ்ப்பாணம் ஊரெழுவை பூர்வீகம் என்பதும் குறிப்படத்தக்கது.

No comments:
Post a Comment