பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்!
நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரரும், பிரபல நகைச்சுவை நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
தனது 66 ஆவது வயதில் இன்று காலை சென்னையில், அவர் காலமானார்.
பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான எம்.ஆர். சந்தானத்தின் மகனான ஆர்.எஸ்.சிவாஜி, நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரர்.
’பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் நடிகராக அறிமுகமான ஆர்.எஸ்.சிவாஜியை நடிக்கச் சொல்லி வலியுறுத்தியது நடிகர் பிரதாப்.
அதன் பின்னர், நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இவர் பேசிய ‘சார், நீங்க எங்கேயோ போயிட்டீங்க சார்’ வசனம் ரசிகர்களிடையே பிரபலமடைந்து இப்போது வரை பேசப்பட்டு வருகிறது.
சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த ஆர்.எஸ்.சிவாஜி, உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.
நேற்று, இவரது நடிப்பில் ‘லக்கிமேன்’ திரைப்படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
 Reviewed by Author
        on 
        
September 02, 2023
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
September 02, 2023
 
        Rating: 

 
 
 

 
 
 
.jpg) 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment