23 இந்திய மீனவர்களும் மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் கையளிப்பு
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று சனிக்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் மேலதிக நடவடிக்கைகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை மன்னார் மாவட்டம் மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் தலைமன்னார் கடற்படையினர் கையளித்துள்ளனர்.
தலைமன்னார் கடற்படை முகாமில் மலேரியா பரிசோதனை மேற்கொண்ட பின்னர் இன்று (29) ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் 23 மீனவர்களும் கையளிக்கப்பட்டனர்.
கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளின் விசாரணைகளின் பின்னர் 23 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த படவுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் சீன உளவு கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து நேற்று (28) மாலையில் இருந்து இலங்கை கடற்படையினர் இலங்கையின் பல்வேறு கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று இரவு இராமநாதபுரம் மாவட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்களையும் மூன்று ரோலர் படகுகளையும் கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
23 இந்திய மீனவர்களும் மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் கையளிப்பு
Reviewed by Author
on
October 29, 2023
Rating:

No comments:
Post a Comment