அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை மாணவர்கள் ஜ பி சி தமிழ் மற்றும் டான் தொலைக்காட்சிகளுக்கு கள விஜயம்

 வவுனியா பல்கலைக்கழகத்தில் ஊடக கல்வியறிவு மற்றும் இதழியல் உயர்தர சான்றிதழ் கற்கைநெறியினை பயில்கின்ற மாணவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஜ பி சி தமிழ் தொலைக்காட்சி மற்றும் டான் தொலைக்காட்சி அலுவலகங்களுக்கு கள விஜயம் ஒன்றினை இன்றையதினம் (29) மேற்கொண்டு இருந்தனர்


வவுனியா பல்கலைக்கழகத்தில் ஊடக கல்வியறிவு மற்றும் இதழியல் உயர்தர சான்றிதழ் கற்கைநெறியினை பயில்கின்ற மாணவர்கள் செயல்முறை ரீதியான விளக்கங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கத்தோடு ஊடக நிறுவனங்களுக்கான விஜயத்தை இன்று மேற்கொண்டுள்ளனர்


அந்தவகையில் இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஜ பி சி தமிழ் தொலைக்காட்சி மற்றும் டான் தொலைக்காட்சி அலுவலகங்களுக்கு கள விஜயம் மேற்கொண்டனர்

அங்கு தொலைக்காட்சி அலைவரிசையில் நிகழ்வுகள் செய்திகள் வெளியிடுவது தொடர்பான அனைத்து பகுதிகளுக்கும் சென்று  அவை எவ்வாறு இயக்கப்படுகின்றன என்கின்ற விடயங்கள் தொடர்பாக பார்வையிட்டனர்

இதனை தொடர்ந்து யாழ் ஊடக அமையத்தினருடன் சந்திப்பில் ஈடுபட்டனர்

இவர்கள் இன்றும் (29) நாளையும் (30) பத்திரிகை நிறுவனங்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக கற்கை வளாகம் ஆகியவற்றுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்


குறித்த கள விஜயத்தின் போது குறித்த  கற்கை நெறியின் கல்விசார் இணைப்பாளர் சிரேஸ்ர விரிவுரையாளர் திருமதி மதிவதனி சசிதரன் மற்றும் குறித்த பயிற்சி நெறியின் வளவாளர்களான    கலாநிதி ரூபன் மரியாம்பிள்ளை அடிகளார்  அமிர்தநாயகம் நிக்ஸன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தவை குறிப்பிடத்தக்கது















வவுனியா பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை மாணவர்கள் ஜ பி சி தமிழ் மற்றும் டான் தொலைக்காட்சிகளுக்கு கள விஜயம் Reviewed by Author on October 29, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.