அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மின்சார சபை ஊழியர் மரணம்

 வவுனியா  மன்னார் வீதியில் பிரதேச செயலகத்திற்கு முற்பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில் மின்சார சபை ஊழியரான குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பாெலிசார் தெரிவித்தனர். 


நேற்று (29.10) இரவு இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

வவுனியா - மன்னார் வீதியில் வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பாதைசாரி கடவை பகுதியில் வீதி ஓரமாக நடந்து சென்றவர்  மீது பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனம் மாேதியதில் இவ் விபத்து ஏற்பட்டிருந்தது.

முல்லைத்தீவில் மின்சார சபையில் பணி புரியும் ஊழியர் ஒருவர் குருமன்காடு கலைமகள் மைதானத்திற்கு அருகில் உள்ள வீட்டிலிருந்து தனது பணி நிமித்தம் முல்லைத்தீவு செல்வதற்காக பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்ற பாேதே இவ் விபத்து ஏற்பட்டிருந்தது.

விபத்தில் வவுனியா மன்னார் வீதி கலைமகள் மைதானத்தருகில்  வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய நெளபர் என்பவர் படுகாயமடைந்து வவுனியா பொதுவைத்தியசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

குறித்த வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  மேலதிக விசாரணைகளை வவுனியா  பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மின்சார சபை ஊழியர் மரணம் Reviewed by Author on October 30, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.