அண்மைய செய்திகள்

recent
-

மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றார் மேழிக்குமரன்.

 அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழகம் கலாபூசணம்.தமிழ்மணி.மேழிக் குமரனுக்கு  "மதிப்புறு முனைவர்" பட்டம் வழங்கி கௌரவித்தது.


அமெரிக்க முத்தமிழ் பேரவை, உலக முத்தமிழ் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து28,29.10.2023  சனிக்கிழமை   மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இலங்கையின் நுவரெலியா  மாவட்டத்தின் ரம்பொட நகரில் உள்ள தொண்டமான் கலாச்சார மண்டபத்தில் உலக முத்தமிழ் ஆய்வு மாநாடு ஒன்றினை நடாத்தின.  

இம்மாநாட்டில்  தமிழ் மொழி மற்றும் தமிழர் தொடர்பான ஆய்வரங்குகளும் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன. இம்மாநாட்டில் அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழகத்தில் மரபுவழி பயின்ற மாணவர்களுக்கு  பட்டயச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கவிஞர் தாமரைச்செல்வி பட்டய சான்றிதழ் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இம்மாநாட்டில் தமிழ் இலக்கிய சேவை ஆற்றிவரும் 12 ஆளுமைகளை தேர்ந்தெடுத்து, அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழகம் "மதிப்புறு முனைவர்" பட்டம் வழங்கி கௌரவித்தது.

கலாபூஷணம் தமிழ்மணி மேழிக் குமரன் ஆற்றிவரும் இலக்கியச் சேவைகளுக்காக "மதிப்புறு முனைவர் " பட்டம் வழங்கி கௌரவிக்கப்பெற்றார்.







மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றார் மேழிக்குமரன். Reviewed by Author on October 30, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.