சர்வதேச வறுமை ஒழிப்பு வார நிகழ்வுகள் முல்லைத்தீவில் சிறப்பாக இடம்பெற்றது
சர்வதேச வறுமை ஒழிப்பு வாரம் அக்டோபர் 17 முதல் 23 வரை கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நிலைமையிலே பல்வேறு திணைக்களங்களினாலும் பல்வேறு வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
அந்த வகையில் சமுர்த்தி அபி திணைக்களத்தினால் வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு வேலை திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ரண்விமன வீடமைப்பு கொடுப்பனவு வழங்கல், ஜெய விமன வீடமைபபு கொடுப்பனவு வழங்கல், வீட்டு லொத்தர் கொடுப்பனவு வழங்கல், சிறுவர் சேமிப்பு வேலை திட்டம், சிரமதானம், கடன் வழங்குதல், போதை ஒழிப்பு விழிப்புணர்வு,மற்றும் சிசுபல மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வேலை திட்டங்கள் இந்த வறுமை ஒழிப்பு வாரத்திலேயே முன்னெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தின் மாவட்ட ரீதியான ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம்(18) ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதயன் அவர்களுடைய தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட பணிப்பாளர் முபாரக் ஒட்டுசுட்டான் பிரதேச உதவி பிரதேச செயலாளர் றமேஸ் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து கொண்டு பல்வேறு உதவி திட்டங்களை வழங்கி வைத்தனர்
அந்தவகையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் தெரிவுசெய்யப்பட்ட மூன்று பயனாளிகளுக்கு புதிய வீடமைப்பு கொடுப்பனவு தலா 750000 வழங்கிவைக்கப்பட்டதோடு மூன்று வீட்டு லொத்தர் பயனாளிகளுக்கு தலா 250000 கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டதோடு நான்கு மாணவர்களுக்கு சிறுவர் சேமிப்பு வேலை திட்டத்துக்கான பரிசில்களும் , மூன்று பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டதோடு, நான்கு மாணவர்களுக்கு சிசுபல அப்பியாச கொப்பிகள் வழங்கப்பட்டது
அத்தோடு பிரதேச செயலகத்தினால் சில நன்கொடையாளர்கள் ஊடாக பெறப்பட்டு பத்து பயனாளர்களுக்கு தலா பத்து கிலோ அரிசி பொதிகளும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து
போதை பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும் பிரதேச செயலக வளாகத்தில் மரநடுகை வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
சர்வதேச வறுமை ஒழிப்பு வார நிகழ்வுகள் முல்லைத்தீவில் சிறப்பாக இடம்பெற்றது
Reviewed by Author
on
October 19, 2023
Rating:

No comments:
Post a Comment