அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் போதைப்பொருள் வர்த்தகத்தில் முருங்கன் வைத்தியசாலை அம்புலன்ஸ் சாரதி பதவி நீக்கம்- மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவிப்பு

 மன்னாரில் போதைப்பொருள் வர்த்தகத்தில்  ஈடுபட்ட தாக கூறப்படும் முருங்கன் வைத்தியசாலை அம்புலன்ஸ் சாரதி உடனடியாக பதவி நீக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்  தெரிவித்துள்ளார்.


இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

முருங்கன் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வங்காலை யை சேர்ந்த சாரதி ஒருவரும் வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் நபர் ஒருவரும் ஐஸ் போதை பொருள் விற்பனைக்கு என  179  கிராம் எடை கொண்ட  ஐஸ் போதைப்பொருள் பொதி ஒன்றை  கடந்த சனிக்கிழமை (30) இரவு முருங்கன் பாடசாலைக்கு பின்புற மைதானத்தில் அரச  அம்புலன்ஸ் வண்டியில் வருகை தந்த நிலையில் சந்தேகத்தின் பெயரில்  பொலிஸாரால் விசாரணை செய்ய முற்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இரு நபர்களும் பொலிஸ் அதிகாரிக்கு கடித்து தாக்கி தப்பிக்க முயன்ற நிலையில் பிரதான சந்தேக நபரான  முருங்கன் வைத்தியசாலையின்   அம்புலன்ஸ் வண்டி சாரதி தப்பி  ஓடியுள்துடன் மற்றைய நபரை பொலிஸார் கைது செய்து  சட்ட நடவடிக்கைகளுக்காக  மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள் என போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
   
போதைப்பொருள் பிரச்சனைகளுடன் தொடர்பு பட்ட அம்புலன்ஸ் வாகன சாரதி உடனடியாக பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.  இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள்  எந்த தரத்தில் இருந்தாலும் அவர்களுக்கு எதிரான இவ்வாறான நடவடிக்கைகள் தொடரும் .

குறித்த  சாரதி ஆம்புலன்ஸ் வண்டியில் ஐஸ் போதைப் பொருளை கொண்டு சென்ற வேளை பொலிஸாரால் இடை மறிக்கப்படவில்லை.

 சாரதி அன்றைய தினம்  மாலை 6 மணி முதல் வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயுள்ளார்.

 அந்த சமயம் ஆம்புலன்ஸ் வைத்தியசாலையில் இருந்துள்ளது. 

பின்னர் பொலிஸாரால் வாகனமும் சாரதியின் விடுதியும் சோதனையிடப்பட்ட பொழுது அங்கு போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதனடிப்படையில் சாரதி இன்று (2)எம்மால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 
மேலும் குறித்த அம்புலன்ஸ் வண்டியின் சேவை இரண்டு நாட்களாக இடைநிறுத்தப்பட்டு இன்று எமது விசாரணைக் குழுவினாரால் முழுமையாக சோதனை செய்யப்பட்டது.

  அதில் போதைப் பொருட்கள் எவையும் இருக்கவில்லை என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் மேலும் தெரிவித்தார். தெரிவித்தார்






மன்னாரில் போதைப்பொருள் வர்த்தகத்தில் முருங்கன் வைத்தியசாலை அம்புலன்ஸ் சாரதி பதவி நீக்கம்- மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவிப்பு Reviewed by Author on October 02, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.