வடகிழக்கு சட்டத்தரணிகள் நாளை(03) முல்லையில் பாரிய போராட்டம் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் காலவரையறையின்றி தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு
முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று தொடக்கம் காலவரையறையின்றி தொடர் நீதிமன்றப் புறக்கணிப்புகணிப்பைச் செய்வதாக முடிவெடுத்துள்ளனர்
முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினைச் சார்ந்த சட்டத்தரணிகள் அனைவரும் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகாது தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பார்கள்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நாளை (03.09.2023) காலை 10 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து அதிகளவான சட்டத்தரணிகள் இணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
குறிப்பாக முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் கிளிநொச்சி,வவுனியா,மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் உள்ளிட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து சட்டத்தரணிகள் சங்கங்களின் சட்டத்தரணிகளும் இணைந்து இந்த பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வடகிழக்கு சட்டத்தரணிகள் நாளை(03) முல்லையில் பாரிய போராட்டம் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் காலவரையறையின்றி தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு
Reviewed by Author
on
October 02, 2023
Rating:

No comments:
Post a Comment