இஸ்லாமியர்களுக்கும் பலஸ்தீனர்களுக்கும் நீதி, நியாயத்தை வழங்காத ஒரு சபையாக ஐ.நா - எச்.எம்.எம். ஹரீஸ் எம்பி குற்றச்சாட்டு
ஆனால், இன்று அதுவொரு வெற்றுச்சபையாகி அது இஸ்லாமிய மக்களுக்கும் பலஸ்தீன மக்களுக்கும் எந்த நீதிநியாயத்தையும் வழங்காத ஒரு சபையாக மாறி இருக்கின்ற தருவாயில் உலக இஸ்லாமிய நாடுகளின் அமையம் சவுதியில் கூடியிருக்கின்றது.
நாங்கள் வேண்டி நிற்பது அமெரிக்க தலைமையிலான நேட்டோ ஒரு பாதுகாப்பு அரணை அந்தந்த நாடுகளுக்கு ஏற்படுத்தியிருப்பது போன்று ஆசிய நாட்டில், மத்திய கிழக்கில் ஆபிரிக்க நாடுகளுக்கு என்று ஒரு புதிய பாதுகாப்பு ஒழுங்கு உலகில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இதற்கு இந்தியா ,சீனா, ரஸ்யா மத்திய கிழக்கு நாடுகள் நேட்டோ போன்று ஒரு பாதுகாப்பு அமயத்தை உருவாக்கி உலகத்தில் நீதியையும் தர்மத்தையும் ஏற்படுத்துகின்ற ஒரு புதிய பாதுகாப்பு ஒழுங்கினை இந்த உலகத்தில் ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும்.
அப்போது தான் மூன்றாம் உலகத்தில் வாழ்கின்ற மக்களுக்கு ஒரு நிம்மதியான நியாயத்தை எதிர்பார்க்க முடியும். இன்று புதிய ஆயுத நவீன ஆயுதங்களைக் கொண்டு இன்று ஒரு பொலிஸ்காரன் போன்று காட்டுமிராண்டிதனம் காட்டுகின்ற இந்த இஸ்ரலை இந்தச்சபையில் நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
அதே நேரம், சுதந்திர பலஸ்தீனராச்சியம் ஏற்படுத்துவதற்கு இந்தியா வெளியுறவுத்துறை அறிவித்துருக்கின்றது. அது போன்று ரஸ்யா அறிவித்துருக்கின்றது, சீனா அறிவித்திருக்கின்றது. அதே போன்று முஸ்லிம் உலக நாடுகள் அனைத்தும் அறிவித்திருக்கின்றது.
இனியும் தாமதிக்காமல் அமைதியும் ஒழுங்கும் உலகம் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ வேண்டுமென்றால் பலஸ்தீன மக்களுக்கு அல் அக்ஸா எங்களுடைய புனித தளம் உள்ளடங்கலான ஜெரூஸலம் நகரத்திலுடனான புதிய பலஸ்தீன இராச்சியம் உருவாக்கப்பட வேண்டும்.
இந்த உலகில் கடந்த 80 வருட காலமாக அநியாயமாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்ற பலஸ்தீன குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்கள் மரணித்தவர்களுடைய ஆத்ம திருப்தியடைவதற்காக உலக இப்புதிய ஒழுங்கில் உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் அமையம் புதிய பலஸ்தீன இராச்சியத்தை உடனடியாக ஏற்படுத்துவதற்கான காஸா முனைத்தாக்குதலை நிறுத்துவதற்கு இஸ்ரேலை வேண்டிக்கொள்ள வேண்டும் என்றார்.
இஸ்லாமியர்களுக்கும் பலஸ்தீனர்களுக்கும் நீதி, நியாயத்தை வழங்காத ஒரு சபையாக ஐ.நா - எச்.எம்.எம். ஹரீஸ் எம்பி குற்றச்சாட்டு
Reviewed by Author
on
October 21, 2023
Rating:

No comments:
Post a Comment