புதிதாக அமைக்கப்பட்ட சிப்பியாறு புனித அந்தோனியார் ஆலயம் மன்னார் ஆயரினால் திறந்து வைப்பு.
மன்னார் சங்குபிட்டி ஏ32பிரதான வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிப்பியாறு பாம்பு வழிகாட்டி(பாம்பாட்டி அந்தோனியார்) என அழைக்கப்படும் புனித அந்தோனியார் ஆலயம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(3) அபிஷேகம் செய்து திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை குறித்த ஆலயத்தை அபிஷேகம் செய்து திறந்து வைத்தார்.
இதன் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார் மற்றும் அருட்தந்தையர்கள் கலந்து கொண்டிருந்தார்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை குறித்த ஆலயத்தை அபிஷேகம் செய்து திறந்து வைத்த பின் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அருட்தந்தையர்கள் இணைந்து திருப்பலியை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலியை தொடர்ந்து புனித அந்தோனியாரின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இதன் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
புதிதாக அமைக்கப்பட்ட சிப்பியாறு புனித அந்தோனியார் ஆலயம் மன்னார் ஆயரினால் திறந்து வைப்பு.
Reviewed by Author
on
October 03, 2023
Rating:

No comments:
Post a Comment