வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு-குருதிக்கொடை வழங்கிய மன்னார் மாவட்ட விவசாயிகள்.
கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் 66 வது ஆண்டு நிறைவையொட்டி மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான முகாம் இன்று செவ்வாய்க்கிழமை (3) காலை முதல் மன்னார் உயிலங்குளம் பகுதியில் அமைந்துள்ள கமநல சேவைகள் நிலையத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட கமநல உதவி ஆணையாளர் அன்ரனி மெரின் குமார் தலைமையில் இடம்பெற்றது.
வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் உள்ள இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில்,யாழ்; போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் உதவியுடன் குறித்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது மன்னார் மாவட்ட விவசாயிகள் மற்றும் கமநல கேந்திர நிலைய பணியாளர்களும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்து வைத்தனர்.
-இரத்த தானம் செய்பவர்களுக்கு மன்னார் மாவட்ட கமநல உதவி ஆணையாளரினால் மரக்கன்று வழங்கி வைக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு-குருதிக்கொடை வழங்கிய மன்னார் மாவட்ட விவசாயிகள்.
Reviewed by Author
on
October 03, 2023
Rating:

No comments:
Post a Comment