அண்மைய செய்திகள்

recent
-

தேராவில் கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக அரசியல் தலைவர்கள் அரச அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்

 முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேராவில் கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக அரசியல் பிரமுகர்கள் அரச  அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்றது


இன்று (10) மாலை 1.00 மணிக்கு தேராவில் பொது நோக்கு மண்டபத்தில் சமூக செயற்ப்பாட்டாளர் வேலு தியாகராசா தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தி.ஜெயகாந் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக காணிக்கிளை உத்தியோகத்தர் இரங்கவேள் தேராவில் கிராம அலுவலர் திருநாவுக்கரசு உமாயிதன் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிராம் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்

கிராமத்தில் காணியற்றவர்களின் காணிப் பிரச்சினை வடிகால் பிரச்சினை ஆவணங்கள் இல்லாத பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இதன்போது கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டது














தேராவில் கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக அரசியல் தலைவர்கள் அரச அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் Reviewed by Author on October 10, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.