அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் ஏழு கடைகளில் தொடர் திருட்டு: பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக துணிகரம்!

 வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் முன்பாகவுள்ள 7 வியாபார நிலையங்களில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  


நேற்று இரவு இந்த தொடர் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கண்டி வீதியில் வன்னிப் பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக  உள்ள வியாபார நிலையங்களின் கதவுகளை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.  

இது தொடர்பில் வியாபார நிலைய உரிமையாளர்கள் பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து சிசீடீவி கமராக்களின் உதவியுடன் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

7 கடைகளில் இடம்பெற்ற இத் திருட்டில் 50ஆயிரம் ரூபாய் வரையிலான பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 




வவுனியாவில் ஏழு கடைகளில் தொடர் திருட்டு: பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக துணிகரம்! Reviewed by Author on November 21, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.