அண்மைய செய்திகள்

recent
-

மியன்மாரில் கைதான இலங்கை மீனவர்களை வழக்குகளின்றி விடுவிக்க முயற்சி

 

மியன்மாரில் கைதான இலங்கை மீனவர்களை வழக்குகளின்றி விடுவிக்க முயற்சி

மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை எந்தவித வழக்கும் இன்றி விரைவாக விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மியன்மார் உள்துறை அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட மீனவர்களில் நேயாளிகள் நால்வரும் உள்ளடங்குவதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் கூறியுள்ளார். 

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கை மீனவர்கள் ஒவ்வொரு வருடமும் மியன்மார் அரசாங்கத்தினால் கைது செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

மியன்மார் கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 02 மீன்பிடி படகுகளுடன் 15 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு மாதத்திற்கு முன்னர் கற்பிட்டி, நீர்கொழும்பிலிருந்து ரயன்புத்தா மற்றும் லோரன்ஸ் ஆகிய மீன்பிடி படகுகள் மூலம் மீன்பிடிக்க சென்ற இந்த மீனவர்கள் கடந்த 02 ஆம் திகதி  மியன்மாரில் கைது செய்யப்பட்டனர்.



மியன்மாரில் கைதான இலங்கை மீனவர்களை வழக்குகளின்றி விடுவிக்க முயற்சி Reviewed by வன்னி on December 23, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.