மன்னார் பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி :-அயிலன் FC அணி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.
மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் கினால் மாவட்டத்தில் உள்ள உதைபந்தாட்ட வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்த மன்னார் பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி கடந்த யூலை மாதம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இறுதிச் சுற்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (3) மாலை -மன்னார் பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
-42 விளையாட்டு கழகங்களை சேர்ந்த வீரர்களை 12 உரிமையாளர்கள் தமக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் பெற்று தமது கழகங்களை அமைத்து போட்டியில் பங்கு பற்றி வந்தனர்.
லீக் முறையில் போட்டிகள் இடம் பெற்று புள்ளி அடிப்படையில் 4 அணிகள் 2 ஆம் சுற்றுக்கு தெரிவானது.இரண்டாவது சுற்றுக்கு 2 அணிகள் தெரிவானது.
குறித்த போட்டியானது ஏ.கே.ஆர்.FC அணிக்கும் அயிலன் FC அணிக்கும் இடையில் இடம்பெற்றது.
இதன் போது அயிலன் FC அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.
முதல் நிலையை பெற்றுக்கொண்ட அணிக்கு 10 லட்சம் ரூபாவும்,2வது இடத்தை பெற்றுக் கொண்ட அணிக்கு 5 இலட்சம் ரூபாவும் பணப் பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வுக்கான நிதி அனுசரணை யை சிறி சபா ரத்தினம் அறக்கட்டளை வழங்கியது.
குறித்த போட்டியில் விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,முன்னால் வடமாகாண செயலாளர் பத்திநாதன்,அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லஸ்,மற்றும் அருட்தந்தையர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி :-அயிலன் FC அணி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.
Reviewed by Author
on
December 04, 2023
Rating:

No comments:
Post a Comment