கைத்தொலைபேசியை பார்த்து பேரூந்து ஓட்டும் சாரதி-
நீண்ட நேரமாக கைத்தொலைபேசியை பார்த்துக் கொண்டு அரச பேரூந்தை ஓட்டிச் சென்ற சாரதியின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
வட மாகாணத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் கடந்த திங்கட்கிழமை(11) அன்று 12 .30 மணியளவில் கிளிநொச்சி வவுனியா வழியாக பயணத்தை மேற்கொள்ளும் பேரூந்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிகளவான மக்கள் பொதுப்போக்குவரத்தை நம்பி பயணம் செய்கின்ற நிலையில் அண்மைக்காலமாக சாரதிகளின் கவனயீனம் காரணமாக பெறுமதியான பல உயிர்கள் பல்வேறு பகுதிகளில் பலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கைத்தொலைபேசியை பார்த்து பேரூந்து ஓட்டும் சாரதி-
Reviewed by NEWMANNAR
on
December 12, 2023
Rating:

No comments:
Post a Comment