அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா சாரண சங்கத்தின் மாவட்ட ஆணையாளர் மற்றும் நிர்வாகம் தெரிவு

வவுனியா மாவட்ட சாரண சங்கத்தின் நிர்வாகத் தெரிவும், மாவட்ட ஆணையாளர் தெரிவும் (12.12) அன்று இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில், இலங்கை சாரணர் சங்கத்தின் தலைமை சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனாபிரித் பெர்னாண்டோ மற்றும் பிரதி பிரதம சாரணர் ஆணையாளர் எம்.எப்.எஸ்.முஹீட் ஆகியோரின் பங்கு பற்றலுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.  

இதன்போது, வவுனியா மாவட்ட ஆணையாளராக வவுனியா செட்டிக்குள பிரதேச செயலக உத்தியோகத்தர் கஜேந்திரன் தெரிவு செய்யப்பட்டதுடன், வவுனியா மாவட்ட தலைவராக வவுனியா வடக்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ம.ஜெயரூபன் அவர்களும், செயலாளராக வவுனியா தெற்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீரசிங்கம் அவர்களும், பொருளாளராக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர் ஆ.லோகேஸ்வரன் அவர்களும், உப தலைவராக வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய அதிபர் தமிழழகன் அவர்களும், உப செயலாளராக பூவரசன்குளம் மகா வித்தியாலய அதிபர் முரளிதரன் அவர்களும், பதக்க செயலாளராக வவுனியா இராசேந்திரங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் பரந்தாமன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன், நிர்வாக உறுப்பினர்களாக ஊடகவியலாளர் வ.பிரதீபன், அதிபர் ஸ்ரீரங்கநாதன், ஆசிரியர்களான சு.காண்டீபன், க.மயூரன், சுதர்சினி, பிரிய தர்ஷினி மற்றும் தனியார் நிறுவன உத்தியோகத்தர்களான

சஜீப்நாத், கெர்சோன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
வவுனியா சாரண சங்கத்தின் மாவட்ட ஆணையாளர் மற்றும் நிர்வாகம் தெரிவு Reviewed by NEWMANNAR on December 13, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.