மது போதையில் சாட்சி கூற சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில்..!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் மது போதையில் விசாரணைக்கு இடையூறு செய்த பொலிஸ் உத்தியோகத்தரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (04) மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றது.
மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீதிமன்றத்திற்கு சாட்சியமளிப்பதற்காக சென்றிருந்தார்.
இந்நிலையில் குறித்த நபர் மதுபோதையில் நீதிமன்ற அமர்வில் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.
குறித்த நபரை கைது செய்த பொலிஸார் பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
சந்தேக நபரை இன்றைய தினம் (05) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் சந்தேக நபருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment