மன்னார் மாவட்டச்செயலகம் இரண்டாவது தடவையாக வெற்றி
மன்னார் மாவட்டச்செயலகம் இரண்டாவது தடவையாக வெற்றி
மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கிடையிலான அரச அதிபர் வெற்றிக்கிண்ண மென்பந்து சுற்று போட்டி இவ்வருடம் யாழ் மாவட்ட செயலக ஏற்பாட்டில் யாழ் மத்திய கல்லூரி எதிர்வீரசிங்கம் விளையாட்டு மைதானத்தில்சிறப்பாக இடம்பெற்றது. தற்போதைய கிளி நொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களின் எண்ணத்தில் 2018 இல் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டு இவ் வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வருகின்றவருடம் மன்னார் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது கடந்த வருடம் போன்று இம்முறையும் இரண்டாவது தடவையாக மன்னார் மாவட்டம் கிண்ணத்தினை சுவிகரித்து கொண்டது வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

No comments:
Post a Comment