அண்மைய செய்திகள்

recent
-

சுவிஸ் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ் இளைஞன் மீது முறைப்பாடு

 சுவிஸ் வாழ் பெண் ஒருவரை ஏமாற்றிய யாழ் இளைஞனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


திருமணம் செய்தாக கூறி 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


முறைப்பாடு ஒன்றை செய்வதற்காக பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.


அன்பளிப்பு பொருட்கள்

இதனடிப்படையில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.


ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார்.


அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுத்துள்ளார். அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.




சுவிஸ் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ் இளைஞன் மீது முறைப்பாடு Reviewed by Author on April 16, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.