படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 20ஆம்ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு
>படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 20ஆம்ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர், நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் 31.05.2024 இன்று மாலை ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களது உருவப்படத்திற்கு, முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களால் சுடரேற்றி மலர்தூவி, உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 2004ஆம்ஆண்டு, மே மாதம் 31ஆம் திகதியன்று தனது அலுவலகத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது மட்டக்களப்பில் வீதியில் வைத்து சிரேஸ்ட ஊடகவியலாளர் நடேசன் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
May 31, 2024
Rating:


No comments:
Post a Comment